×

மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியது ஆள்வோரின் பொறுப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசின் செயல்பாட்டால், பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ₹90-ஐ கடந்துள்ளது. சென்னையில் நேற்றைய விலையைவிட 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலையேற்றம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். அதுபோலவே, டீசல் விலையும் 28 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது. சரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது.  சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை குறைவதேயில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் மேல் மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அன்றாடத் தேவையாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு வணிகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்போது விலைவாசி கடுமையாக ஏறும். அதுவும் மக்கள் மீதே சுமையாகும். கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. அதனால் உடனடியாக பெட்ரோல்-டீசல் மீதான வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மாநில அரசுக்கும் இது பொருந்தும்.

Tags : state government ,MK Stalin , It is the responsibility of the people to reduce the burden on the people: to reduce the increase in petrol and diesel prices: MK Stalin's insistence to the Central and State Governments
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...